LPL தொடரின் ஒலிபரப்பு உரிமையை பெற்றுள்ள தமிழ் எப்.எம்

இந்த LPL போட்டிகளை SBC தொலைக்காட்சியில் கண்டுக்களிக்க முடியும் என்பதுடன், போட்டிகள் தொடர்பான முழு தகவலையும் எங்கேயும் எப்போதும் (99.5| 99.7| www.tamilfm.online) TAMIL FM வானொலி ஊடக உடனுக்குடன் கேட்கவும் முடியும்.

Jul 13, 2023 - 13:23
LPL தொடரின் ஒலிபரப்பு உரிமையை பெற்றுள்ள தமிழ் எப்.எம்

Colombo (News21) லங்கா பிரீமியர் லீக்  LPL தொடரின் நான்காவது பருவகாலத்துக்கான உத்தியோகபூர்வ தொலைகாட்சி பங்காளராக SBC TVயும், Exclusive radio partnerஆக தமிழ் எப்.எம் வானொலியும்  இணைந்துள்ளன.

ஜூலை மாதம் 30ஆம் திகதி கோலாகலமாக ஆரம்பமாகவுள்ள லங்கா பிரீமியர் லீக்கின் நான்காவது பருவகாலத்துக்கான போட்டிகள், எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 20ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன.

Lyca's Jaffna Kings, Colombo Strikers, Dambulla Aura, Galle Titans மற்றும் B-Love Kandy ஆகிய 5 அணிகள் மோதும்  மாபெரும் கிரிக்கெட் தொடரில்,  கடந்த 3 வருடங்களாக லைக்காஸ் ஜப்னா கிங்ஸ் அணி கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டது. 

வருடாந்தம் நடத்தப்படும் LPL தொடர் இலங்கை ரசிகர்களை கடந்து உலக ரசிகர்களையும் ஈர்த்துள்ளது. 

ஜூலை 30ஆம் திகதி தொடக்கம் ஓகஸ்ட் 20ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள இத்தொடரின் போட்டிகள், மாலை 3 மணிக்கும் இரவு 7.30 மணிக்கும் ஆரம்பமாகின்றன. 

இந்த LPL போட்டிகளை SBC தொலைக்காட்சியில் கண்டுக்களிக்க முடியும் என்பதுடன், போட்டிகள் தொடர்பான முழு தகவலையும் எங்கேயும் எப்போதும் (99.5| 99.7| www.tamilfm.online) TAMIL FM வானொலி ஊடக உடனுக்குடன் கேட்கவும் முடியும்.

LPL 2023 பருவகால தொடரின் உத்தியோகபூர்வ ஒளி – ஒலிபரப்பு உரிமைகளை பெற்றுள்ள SBC TV மற்றும் தமிழ் எப்.எம் வானொலி என்பன அல்லிராஜா சுபாஸ்கரனின் தலைமையிலான LYCA குழுமத்தின் ஊடகங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW GROUP 01 அல்லது JOIN NOW GROUP 02


NEWS21
நியூஸ்21 இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
நியூஸ்21 Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...
Editorial Staff நான் பத்திரிகை துறையில் கடந்த 13 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு.