சுவிஸ் பொருளாதாரம்: மூன்றாவது காலாண்டில் 0.5% வீழ்ச்சி
சுவிஸ் நாட்டின் பொருளாதாரம் 2025ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் 0.5% வீழ்ச்சியடைந்துள்ளதாக சுவிஸ் பொருளாதார விவகாரங்களுக்கான மாநில செயலகம் தெரிவித்துள்ளது.
சுவிஸ் நாட்டின் பொருளாதாரம் 2025ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் 0.5% வீழ்ச்சியடைந்துள்ளதாக சுவிஸ் பொருளாதார விவகாரங்களுக்கான மாநில செயலகம்(SECO) வெளியிட்ட அறிக்கை தெரிவித்துள்ளது.
முந்தைய காலாண்டுகளுடன் ஒப்பிடுகையில் ஏற்பட்ட இந்த சரிவு நாட்டின் தொழில் துறையில் ஏற்பட்ட மந்த நிலையை பிரதிபலிக்கிறது. குறிப்பாக, இரசாயன மற்றும் மருத்துவத் துறைகள் குறைந்த செயல்பாட்டால் முக்கிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. உற்பத்தி துறை இதே காலாண்டில் 3% சரிவை கண்டது, கட்டுமான துறையும் 0.6% வீழ்ச்சியை பதிவு செய்தது.
எதிர்மறை வளர்ச்சியை சமநிலைப்படுத்த, நாட்டின் சேவை துறையில் முன்னேற்றம் காணப்படுகிறது. குறிப்பாக வர்த்தகத் துறையில் 1.6% வளர்ச்சி ஏற்பட்டுள்ளது, இது பொருளாதார மந்தத்தைக் குறைக்க உதவுகிறது என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.