செம்மணி புதைகுழியில் கைக்குழந்தையின் எலும்புக்கூடு அடையாளம்!

இதுவரை செம்மணி மனிதப் புதைகுழியில் 22 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

ஜுன் 26, 2025 - 23:41
செம்மணி புதைகுழியில் கைக்குழந்தையின் எலும்புக்கூடு அடையாளம்!

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியில் கைக்குழந்தையின் எலும்புக்கூடு உட்பட 3 மனித என்புத் தொகுதிகள், இன்று (26) புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு இன்று வியாழக்கிழமை காலை ஆரம்பமானது.

இதன்போதே கைக்குழந்தையின் எலும்புக்கூடு உட்பட 3 மனித என்புத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. 

இதுவரை செம்மணி மனிதப் புதைகுழியில் 22 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணத்துக்கு நேற்று (25) விஜயம் மேற்கொண்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க், செம்மணி மனிதப் புதைகுழியை நேரில் பார்வையிட்டார்.

யாழ்ப்பாணத்துக்கு ஹெலிகொப்டர் ஊடாக நேற்றுப் பிற்பகல் வருகை தந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர், 4.30க்கு செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்ட மனித புதைகுழியைப் பார்வையிட்டார்.

சுமார் 30 நிமிடங்கள் வரையில் செம்மணி மனிதப் புதைகுழியைப் பார்வையிட்ட அவர், பல்வேறு தரப்புகளுடனும் கலந்துரையாடினார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!