தேநீர், சோற்றுப்பார்சல் உள்ளிட்ட அனைத்து உணவுப்பொருட்களின் விலை அதிகரிப்பு

இதேவேளை, தேநீர் 5 ரூபாயினாலும் பால் தேநீர் 10 ரூபாயினாலும் அதிகரிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Mar 2, 2024 - 21:08
தேநீர், சோற்றுப்பார்சல் உள்ளிட்ட அனைத்து உணவுப்பொருட்களின் விலை அதிகரிப்பு

சோற்றுப்பார்சல், கொத்து மற்றும் ப்ரைட் ரைஸ் என அனைத்து உணவுப்பொருட்களின் விலை, இன்று (02) நள்ளிரவு முதல் அதிகரிக்கின்றன. 

அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் இது தொடர்பில் அறிவித்துள்ளது. 

அதன்படி, கொத்து மற்றும் ப்ரைட் ரைஸ் ஆகியன 50 ரூபாயால் அதிகரிக்கப்படுகின்றன. 

அத்துடன், சோற்றுப்பொதி 25 ரூபாயினாலும் சிற்றுண்டிகள் 10 ரூபாயினாலும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, தேநீர் 5 ரூபாயினாலும் பால் தேநீர் 10 ரூபாயினாலும் அதிகரிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW GROUP 01 அல்லது JOIN NOW GROUP 02


NEWS21
நியூஸ்21 இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
நியூஸ்21 Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...
Editorial Staff நான் பத்திரிகை துறையில் கடந்த 13 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு.