சிறைக்குள் இருந்தாலும் மக்களிடம் பேசிய இம்ரான் கான்! அதிர்ந்துபோன பாகிஸ்தான் ராணுவம்! நடந்தது என்ன?

குறிப்பாக இம்ரான் கான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், அவரால் பிரச்சாரத்தில் நேரடியாகக் கலந்து கொள்ள முடியவில்லை. அப்படி இருந்தும் அவரது கட்சி முன்னிலை பெற்றுள்ளது. இதற்கான காரணம் சுவாரசியமானது

Feb 11, 2024 - 18:44
சிறைக்குள் இருந்தாலும் மக்களிடம் பேசிய இம்ரான் கான்! அதிர்ந்துபோன பாகிஸ்தான் ராணுவம்! நடந்தது என்ன?

பாகிஸ்தான் நாட்டில் கடந்த 8ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. அதன் பிறகு வாக்கு எண்ணிக்கை தொடங்கி 3 நாட்கள் முடிந்த பிறகும் இன்னுமே கூட தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவில்லை.

இருப்பினும், முதற்கட்ட முடிவுகளை வைத்துப் பார்க்கும் போது இம்ரான் கான் கட்சியே முன்னிலையில் உள்ளது. இருப்பினும், அவரை அதிகாரத்திற்கு வரவிடாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் திரைமறைவில் நடந்து வருவதாக சொல்லப்படுகின்றது.

இது ஒரு பக்கம் இருக்க இந்த முறை நடந்த பாகிஸ்தான் தேர்தல் ரொம்பவே முக்கியமாகப் பார்க்கப்படுகிறது. ஏனென்றால் இந்த முறை அங்கே மும்முனை போட்டி நிலவிய நிலையில், அதில் இம்ரான் கான் கட்சிக்கு மட்டும் பல சிக்கல்கள் இருந்தது. 

குறிப்பாக இம்ரான் கான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், அவரால் பிரச்சாரத்தில் நேரடியாகக் கலந்து கொள்ள முடியவில்லை. அப்படி இருந்தும் அவரது கட்சி முன்னிலை பெற்றுள்ளது. இதற்கான காரணம் சுவாரசியமானது

இம்ரான் கான் சிறையில் இருந்த நிலையில், பிரசாரத்திற்கு உதவ அவரது கட்சியினர் தொழில்நுட்பம் பக்கம் திரும்பினர். உலகமே அலறும் ஏஐ மற்றும் டீப் பேக் தொழில்நுட்பங்களைக் கண்டு அலறும் நிலையில், அதையே இம்ரான் கான் கட்சியினர் துணைக்கு அழைத்துக் கொண்டு தேர்தலைச் சந்தித்துள்ளனர். பிரசார காலத்தில் இம்ரான் கானின் டீப் பேக் வீடியோக்கள் இணையத்தில் உலா வரத் தொடங்கின.

அவர் சிறையில் இருந்த நிலையில், தனது கட்சி ஆதரவு பெற்றவர்களுக்கு வாக்களிக்குமாறு இம்ரான் கான் பேசுவது போன்ற வீடியோக்கள் அந்நாட்டின் சமூக வலைத்தளங்களில் டிரெண்டானது. வீடியோவை டீப் பேக் மூலம் உருவாக்கிய அவர்கள், ஆடியோவுக்கு ஏஐ பக்கம் திரும்பினர். 

அப்படியே தத்ரூபமாக அவர் பேசுவது போன்ற வீடியோக்கள் பரவின. அதுவும் தேர்தல் நெருங்க நெருங்க இதுபோன்ற வீடியோக்கள் அதிகரிக்கவே செய்தது.

இம்ரான் கான் மட்டுமின்றி பல அரசியல் தலைவர்களின் வீடியோக்கள் இணையத்தில் டிரெண்டானது. தேர்தல் நெருங்க நெருங்க இதுபோன்ற வீடியோக்கள் அதிகரித்தே வந்தன. 

அந்நாட்டில் உள்ள சில ஊடகங்கள் அவை உண்மை என்று நம்பி அதை ஒளிபரப்பவும் செய்தன. அந்தளவுக்குப் பல வீடியோக்கள் தத்ரூபமாக இருந்தன. இதுபோன்ற வீடியோவுக்கு பின்னால் இம்ரான் கான் கட்சியே இருப்பதாகப் பலரும் குற்றஞ்சாட்டினர். இருப்பினும், அவர்கள் இதைப் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை.

அக்கட்சி சார்பில் அதிகாரப்பூர்வமாக உருவாக்கப்படும் ஏஐ வீடியோக்களில் அவை ஏஐ மூலம் உருவாக்கப்பட்டது என்பதை இடதுபுறம் மேலே குறிப்பிடுகிறார்கள். 

ஆனால், யார் என்றே தெரியாதவர்கள் வெளியிடும் வீடியோக்களில் இதுபோன்ற எச்சரிக்கை வாசகங்கள் எதுவுமே இருப்பதில்லை. இதுவே அங்கே பிரசார சமயத்தில் போலி செய்திகள் பரவ காரணமாக இருந்தது.

இந்த டீப் பேக் தொழில்நுட்பம் மூலமாகவே சிறையில் இருக்கும் இம்ரான் கானை திரையில் கொண்டு வந்து மக்களை நம்ப வைத்துள்ளனர். அதாவது இதைத் தேர்தல் ஆயுதமாகவே அவர்கள் பயன்படுத்தியுள்ளனர்.

வரும் காலங்களில் ஏஐ தான் உலகெங்கிலும் சுதந்திரமான தேர்தல்களுக்கு மிகப்பெரிய ஆபத்துகளில் ஒன்றாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. ஏற்கனவே அர்ஜெண்டினா மற்றும் தைவானில் ஏஐ மூலம் போலியான வீடியோக்கள் பரவி வருகிறது. மேலும், பல நாடுகளில் அது அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.


நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW GROUP 01 அல்லது JOIN NOW GROUP 02


NEWS21
நியூஸ்21 இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
நியூஸ்21 Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...