14 அமெரிக்க தளங்கள் மீது ஈரான் அதிரடித் தாக்குதல்: 100 வீரர்கள் உயிரிழப்பு - மத்திய கிழக்கில் பெரும் போர் மூண்டது!

இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள வளைகுடா நாடுகளில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க ராணுவத் தளங்களை குறிவைத்து ஈரான் கடுமையான தாக்குதலைத் தொடங்கியுள்ளது.

14 அமெரிக்க தளங்கள் மீது ஈரான் அதிரடித் தாக்குதல்: 100 வீரர்கள் உயிரிழப்பு - மத்திய கிழக்கில் பெரும் போர் மூண்டது!
ADVERTISEMENT
ADVERTISEMENT

இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள வளைகுடா நாடுகளில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க ராணுவத் தளங்களை குறிவைத்து ஈரான் கடுமையான தாக்குதலைத் தொடங்கியுள்ளது.

மொத்தம் 14 அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில், 100-க்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டதாக ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இந்தத் தாக்குதல் ராணுவத் தளங்களுடன் நின்றுவிடாமல், வளைகுடா நாடுகளின் முக்கிய இடங்களையும் பதற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளது. பாதுகாப்பு கருதி துபாய் சர்வதேச விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதுடன், உலகப்புகழ் பெற்ற புர்ஜ் கலிபா கட்டிடத்திலிருந்து சுற்றுலாப் பயணிகள் அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், குவைத் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க இலக்குகள் மீது ஈரான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால், ஒட்டுமொத்த அரபு நாடுகளும் போரின் பிடியில் சிக்கியுள்ளன.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT