தமிழ் மற்றும் சிங்கள பாடசாலைகளுக்கான டிசம்பர் மாத விடுமுறையில் மாற்றம்
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான திருத்தப்பட்ட பாடசாலை நாட்காட்டியை கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான திருத்தப்பட்ட பாடசாலை நாட்காட்டியை கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அதன்படி, இன்று (23) முதல் ஜனவரி 4, 2026 வரை டிசம்பர் மாத விடுமுறைக்காக சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகள் மூடப்படும்.
டிசம்பர் 27 முதல் ஜனவரி 4, 2026 வரை டிசம்பர் மாத விடுமுறைக்காக முஸ்லிம் பாடசாலைகள் மூடப்படும்.
அனைத்து பாடசாலைகளிலும் 2026 கல்வியாண்டின் முதல் தவணையின் முதல் கட்டத்தை 2026 ஜனவரி 5 திங்கட்கிழமை அன்று தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிக்கை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
அதன்படி, 2026 கல்வியாண்டின் முதல் தவணை டிசம்பர் 9 ஆம் திகதி வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின்படி செயல்படுத்தப்படும்.
மேலும், 2026 கல்வியாண்டின் இரண்டாவது மற்றும் மூன்றாவது தவணைகள் 2026 நவம்பர் 9, 2025 திகதியிட்ட சுற்றறிக்கை எண் 30/2025 இன்படி செயல்படுத்தப்படும்.
அத்துடன், பரீட்சைகள் திணைக்களத்தினால் முன்னர் அறிவிக்கப்பட்ட பரீட்சை திகதிகளில் எந்த மாற்றங்களும் இருக்காது என்றும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கான 2025 கல்வியாண்டு நேற்று (22) முடிவடைந்ததுடன், முஸ்லிம் பாடசாலைகளின் 2025 ஆம் ஆண்டுக்கான கல்வி நடவடிக்கைகள் டிசம்பர் 26, 2025 வெள்ளிக்கிழமை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.