பாடசாலை மாணவர்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு; அமைச்சரவை அனுமதி

பாடசாலை செல்லும் பிள்ளைகளுக்கு எழுது பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக பாடசாலைப் மாணவர்களுக்கு 6,000 ரூபாய் கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஜனவரி 13, 2026 - 17:30
ஜனவரி 13, 2026 - 17:48
பாடசாலை மாணவர்களுக்கு 6 ஆயிரம்  ரூபாய் கொடுப்பனவு; அமைச்சரவை அனுமதி

அஸ்வெசும உரித்துள்ள குடும்பங்களிலுள்ள பாடசாலை செல்லும் பிள்ளைகளுக்கு எழுது பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக பாடசாலைப் மாணவர்களுக்கு 6,000 ரூபாய் கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்தக் கொடுப்பனவினை நலன்புரிகள் நன்மைகள் சபை மூலமாக வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை வெளியிடும் ஊடகவியலாளர் சந்திப்பு, அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (13) பிற்பகல் நடைபெற்றது.

இதன்போது, அமைச்சரவை பேச்சாளர் இதனைக் கூறினார்.

அஸ்வெசும வேலைத்திட்டத்தில் உள்வாங்கப்படாததும், ஆனாலும் கொடுப்பனவு கிடைக்க வேண்டியவர்கள் மற்றும் நாடளாவிய ரீதியில் 300 குறைவாக மாணவர்களை கொண்ட பாடசாலைகளில் கல்வி கற்கின்ற மாணவர்கள், பிரிவெனாக்கள் மற்றும் துறவுப் பெண்கள் ஆச்சிரமங்களில் கல்வி பயில்கின்ற மாணவர்கள் மற்றும் துறவு மாணவர்கள், சிறுவர் அபிவிருத்தி நிலையங்களிலுள்ள பாடசாலை செல்லும் மாணவர்களுக்காக 6,000/- கொடுப்பனவை கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் ஊடாக செலுத்துவதற்கு 2025 ஆம் ஆண்டில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த நிலையில், குறித்த வேலைத்திட்டத்தை 2026 ஆம் ஆண்டிலும் நடைமுறைப்படுத்துவதற்கு கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராக பிரதமர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!