சதமடித்து மிரட்டிய நஜ்முல்... இலங்கையை வீழ்த்தியது பங்களாதேஷ்!

பங்களாதேஷில் சுற்றுப்பயணம் செய்துவரும் இலங்கை அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. 

Mar 14, 2024 - 07:41
சதமடித்து மிரட்டிய நஜ்முல்... இலங்கையை வீழ்த்தியது பங்களாதேஷ்!

பங்களாதேஷில் சுற்றுப்பயணம் செய்துவரும் இலங்கை அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. 

இதில் முதலாவது ஒருநாள் போட்டி நேற்று சட்டோகிராமில் நடைபெற்றது. இப்போட்டியில்  டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணிக்கு பதும் நிஷங்க - அவிஷ்க ஃபெர்னாண்டோ இணை அதிரடியான தொடக்கத்தை கொடுத்தனர். 

33 ரன்கள் எடுத்த நிலையில் அவிஷ்கா ஃபெர்னாண்டோவும், 36 ரன்கள் எடுத்திருந்த பதும் நிஷங்கவும் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டனர்.

இதயும் படிங்க: வெற்றி மனநிலையுடன் களமிறங்கும் இலங்கை அணி

பின்னர் களமிறங்கிய கேப்டன் குசல் மெண்டிஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுபக்கம் களமிறங்கிய சமரவிக்ரம, சரித் ஆசலங்க ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர். 

பின்னர் குசல் மெண்டிஸுடன் இணைந்த ஜனித் லியனகே பொறுப்பாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். 

பின் குசல் மெண்டிஸ் 59 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, அதன்பின் களமிறங்கிய் வநிந்து ஹசரங்க, மஹீஷ் தீக்‌ஷனா ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். 

தொடர்ந்து 3 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 67 ரன்கள் எடுத்த நிலையில் ஜனித் லியனகேவும் தனது விக்கெட்டை இழந்தார். இதனால் இலங்கை அணி 48.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 255 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

பங்களாதேஷ் அணி தரப்பில் ஷொரிஃபுல் இஸ்லாம், தஸ்கின் அஹ்மத், மற்றும் தன்ஸிம் ஹசன் ஷாகிப் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். 

இலக்கை நோக்கி விளையாடிய பங்களாதேஷ் அணிக்கு சரியான தொடக்கம் கிடைக்கவில்லை. அந்த அணியில் லிட்டன் தாஸ் ரன்கள் ஏதுமின்றியும், சௌமியா சர்க்கார் 3 ரன்களிலும், தாவ்ஹித் ஹிரிடோய் 3 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். 

அதன்பின் இணைந்த கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ - மஹ்முதுல்லா இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். இதில் நஜ்முல் ஹொசைன் தனது அரை சதத்தைப் பத்விசெய்தார். 

அதேசமயம் மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட மஹ்முதுல்லா 4 பவுண்டரி, ஒரு சிக்சர் என 37 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். 

அதன்பின் நஜ்முல் ஹொசைனுடன் இணைந்த முஷ்பிக்கூர் ரஹிமும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதில் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த நஹ்முல் ஹொசைன் தனது சதத்தைப் பதிவுசெய்து மிரட்டினார். 

அவருக்கு துணையாக விளையாடிய முஷ்பிக்கூர் ரஹிமும் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தனர். இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த நஹ்முல் ஹொசைன் சாண்டோ 122 ரன்களையும், முஷ்பிக்கூர் ரஹிம் 73 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். 

இதன்மூலம் பங்களாதேஷ் அணி 44.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. 

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW GROUP 01 அல்லது JOIN NOW GROUP 02


NEWS21
நியூஸ்21 இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
நியூஸ்21 Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...
Editorial Staff நான் பத்திரிகை துறையில் கடந்த 13 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு.