தேர்தல் சட்டத்தை மீறிய 30 வேட்பாளர்களும் 131 ஆதரவாளர்களும் கைது!
தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 09 முறைப்பாடுகளும், 21 முறைப்பாடுகள் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பானவை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று காலை 06 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் 2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் 30 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது.
அவற்றில் தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 09 முறைப்பாடுகளும், 21 முறைப்பாடுகள் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பானவை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது ஒரு வேட்பாளர் மற்றும் 07 ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதேவேளை, கடந்த மார்ச் மாதம் 03ஆம் திகதி முதல் இன்று (ஏப்ரல் 28) வரை மொத்தம் 398 தேர்தல் தொடர்பான முறைப்பாடுகள் பொலிஸாருக்கு கிடைத்துள்ளன.
இந்த முறைப்பாடுகளுக்கு அமைய மொத்தம் 30 வேட்பாளர்களும் 131 ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டனர்.
மேலும், இந்த காலகட்டத்தில் 31 வாகனங்கள் பொலிஸ் காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.