மின்சாரம் தாக்கி யாழில் உயிரிழந்த பெண்
தொலைக்காட்சி பார்ப்பதற்காக மின் ஆளியை செயற்படுத்த முயன்றபோது அவர்மீது மின்சாரம் பாய்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம் - கைதடி வடக்கு கிராமத்தில் பெண்ணொருவர் நேற்று மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
தொலைக்காட்சி பார்ப்பதற்காக மின் ஆளியை செயற்படுத்த முயன்றபோது அவர்மீது மின்சாரம் பாய்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைதடி வடக்கு பகுதியைச் சேர்ந்த 59 வயதான பெண் ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பெண்ணின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.