12 வருஷம் முன்னாடி தந்தை… இப்போது மகன்… தந்தை-மகன் இருவரின் விக்கெட்டை வீழ்த்திய அஸ்வின்...!
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தந்தை மற்றும் மகன் இருவரின் விக்கெட்டையும் வீழ்த்திய ஒரே இந்திய பவுலர் என்கிற வரலாற்றை தன் வசம் கொண்டிருக்கிறார் ரவிச்சந்திரன் அஸ்வின்.

12 வருடங்களுக்கு முன்பு தந்தையின் விக்கெட்டை வீழ்த்திய ரவிச்சந்திரன் அஸ்வின், வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் மகனின் விக்கெட்டையும் வீழ்த்தி தந்தை மற்றும் மகன் இருவரின் விக்கெட்டையும் வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்கிற புதிய வரலாறு படைத்திருக்கிறார்.
வெஸ்ட் இண்டீஸ் சென்று இரண்டு டெஸ்ட் போட்டிகள் மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடுகிறது. இதில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் முதலாவதாக நடக்கிறது.
முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் இறங்கியது. துவக்க வீரர்கள் கிரெய்க் பிராத்வெயிட் 20 ரன்கள் மற்றும் டாக்நரைன் சந்தர்பால் 12 ரன்கள் அடித்து அஸ்வின் சுழலில் சிக்கி அவுட்டாகினர்.
வேகப்பந்து வீச்சாளர இப்படி கேட்ச் பிடித்து பார்த்து இருக்கீங்களா?
டாக்நரைன் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் ரவிச்சந்திரன் அஸ்வின் புதிய வரலாறு படைத்துள்ளார். அதாவது, 2011 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் தீவுகளுக்கு இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தபோது ரவிச்சந்திரன் அஸ்வின் அணியில் இருந்தார். அப்போது வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் சிவ்நரைன் சந்தர்ப்பால் விக்கெட்டை வீழ்த்தினார்.
இந்த வருடம் மீண்டும் வெஸ்ட் இண்டீஸ் வந்திருக்கும்பொழுது அணியில் சிவ்நரைன் சந்தர்ப்பால் மகன் டாக்நரைன் சந்தர்ப்பால் பிளேயிங் லெவனில் இடம்பெற்றிருக்கிறார். இவரது விக்கெட்டை ரவிச்சந்திரன் அஸ்வின் வீழ்த்தியுள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தந்தை மற்றும் மகன் இருவரின் விக்கெட்டையும் வீழ்த்திய ஒரே இந்திய பவுலர் என்கிற வரலாற்றை தன் வசம் கொண்டிருக்கிறார் ரவிச்சந்திரன் அஸ்வின்.