வேகப்பந்து வீச்சாளர இப்படி கேட்ச் பிடித்து பார்த்து இருக்கீங்களா?
இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் எப்போதும் பில்டிங் செய்யும் போது தடுமாறுவதால், கேட்ச் வரும் இடத்தில் வேகப்பந்துவீச்சாளர்களை நிறுத்த கேப்டன்கள் விரும்ப மாட்டார்கள்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் முகமது சிராஜ் அபாரமாக ஒரு கேட்ச் பிடித்து அசத்தினார்.
இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் எப்போதும் பில்டிங் செய்யும் போது தடுமாறுவதால், கேட்ச் வரும் இடத்தில் வேகப்பந்துவீச்சாளர்களை நிறுத்த கேப்டன்கள் விரும்ப மாட்டார்கள்.
மேலும் வேகப்பந்துவீச்சாளர்கள் பந்து பவுண்டரிக்கு சென்றாலும் அதனை தடுக்க சிரமப்படுவார்கள். ஆனால் இது அனைத்தும் தற்போது மாறிவிட்டது.
இந்திய அணியில் இடம்பெற யோ யோ டெஸ்ட் அவசியம் என்று விராட் கோலி, ரவி சாஸ்திரி எடுத்த முடிவு தான் தற்போது அனைத்தையும் மாற்றி இருக்கிறது.
வேகப்பந்துவீச்சாளர்களும் பில்டிங்கில் தற்போது கில்லி போல் செயல்பட்டு வருகிறார்கள்.
150 ரன்களில் சுருண்டது வெஸ்ட் இண்டீஸ்.. 5 விக்கெட் வீழ்த்தி புது சாதனை படைத்த அஸ்வின்..
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணியில் கேப்டன் பிராட்வெயிட் 20 ரன்களிலும் தேஜ்நரைன் சந்தர்ப்பால் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.
இதே போன்று ரேமன், ஷர்துல் தாக்கூர் பந்துவீச்சில் இரண்டு ரன்களில் வெளியேறினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ப்ளாக்வுட் பொறுப்பாக விளையாடி ரன்களை சேர்த்தார்.
34 பந்துகளில் 14 ரன்கள் எடுத்திருந்தபோது பிளாக்வுட் அதிரடியாக விளையாட முயற்சித்து பெரிய ஷாட் ஒன்றை அடித்தார்.
அப்போது பந்து நேராக சென்ற நிலையில் அங்கு நின்று கொண்டிருந்த சிராஜ் ஓடி சென்று தாவி பந்தை பிடித்தார். அந்தப் பந்து பௌண்டரி செல்லும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் சிராஜ் கேட்ச் பிடித்து அசத்தினார்.
இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி மதிய நேர உணவு இடைவெளியின் போது 68 நாட்கள் சேர்ப்பதற்குள் நான்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. சிராஜுனி இந்த கேட்ச் ஆட்டத்தின் போக்கையே மாற்றி விட்டது என்று கூட சொல்லலாம்.