150 ரன்களில் சுருண்டது வெஸ்ட் இண்டீஸ்.. 5 விக்கெட் வீழ்த்தி புது சாதனை படைத்த அஸ்வின்..
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அஸ்வின் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி புதிய சாதனை ஒன்றை படைத்தார்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அஸ்வின் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி புதிய சாதனை ஒன்றை படைத்தார்.
டோமினிக்காவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீசியது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய கேப்டன் பிராத்வெயிட் மற்றும் தேஜ்நரன் சந்தர்பால் ஆகியோர் விக்கெட்டுகளை அஸ்வின் வீழ்த்தினார்.
ஆல்ரவுண்டராக களமிறங்கிய ஷர்துல் தாக்கூர் தனது முதல் ஓவரிலேயே துல்லியமாக பந்துவீசி ரேமன் ரெய்பர் விக்கெட்டை வீழ்த்தினார்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிளாக்வுட் 14 ரன்கள் எடுத்த நிலையில் , ஜடேஜா பந்துவீச்சில் சிராஜின் அபார கேட்ச்சால் வெளியேற, விக்கெட் கீப்பர் ஜோஸ்வா 2 ரன்களில் பெவிலியன் திரும்பினார். இதனால் , வெஸ்ட் இண்டீஸ் அணி 76 ரன்களுக்கு 5 விக்கெட் இழந்து தடுமாறி வருகிறது.
2018ஆம் ஆண்டு கில்லுடன் ஆண்டர் 19 வீரராக களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் வீரர் அல்தானெஸ் மட்டும் தான் இந்திய பந்துவீச்சை எதிர்கொண்டு ரசிகர்களுக்கு நம்பிக்கை அளித்தார்.
மழையால் பாதித்த போட்டி - ஆஸியை கலங்கவைத்த இங்கிலாந்து!
அறிமுக போட்டியிலேயே தனது திறமையை அல்தானெஸ் வெளிப்படுத்தி ரன்களை சேர்த்தார். ஆனால் இவருக்கு யாரும் துணை நிற்கவில்லை. ஜேசன் ஹோல்டர் 18 ரன்களிலும், அல்சாரி ஜோசப் 4 ரன்களிலும் வெளியேற, ரஹிம் கார்ன்வால் மட்டும் 19 ரன்கள் சேர்த்தார்.
இதன் மூலம் 64.3 ஓவர்களை எதிர்கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி 150 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்தது.
இந்திய பந்துவீச்சு தரப்பில் அஸ்வின் 33வது முறையாக 5 விக்கெட்டுகளை கைப்பற்றி ஆண்டர்சன் சாதனையை முறியடித்தார். ஜடேஜா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.