திரெட்ஸ் செயலிக்கு எதிராக ட்விட்டர் சட்ட நடவடிக்கை
திரெட்ஸ் செயலியில் தனது சொந்த ட்விட்டர் செயலியில் உள்ளதைப் போன்ற பல அம்சங்கள் இருப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் புதிதாக அறிமுகப்படுத்திய திரெட்ஸ் செயலிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதாக ட்விட்டர் உரிமையாளர் எலோன் மஸ்க் தெரிவித்துள்ளார்.
திரெட்ஸ் செயலியில் தனது சொந்த ட்விட்டர் செயலியில் உள்ளதைப் போன்ற பல அம்சங்கள் இருப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
அத்துடன், ட்விட்டரில் இருந்து வெளியேறிய ஊழியர்களை பயன்படுத்தி ஜுக்கர்பெர்க் திரெட்ஸ் அப்ளிகேஷனை தயாரித்துள்ளதாக எலோன் மஸ்க் கூறியுள்ளார்.
ட்விட்டருக்கு போட்டியாக களமிறங்கியுள்ள திரெட்ஸ்
நேற்று (06) அறிமுகம் செய்யப்பட்ட திரெட்ஸ் செயலியில் இணைந்துள்ள பயனர்களின் எண்ணிக்கை தற்போது 30 மில்லியனைத் தாண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும், பயனர்கள் தங்களின் இன்ஸ்டாகிராம் கணக்கை வைத்து திரெட்ஸ் செயலியில் இணைந்துகொள்ள முடியும்.