மண்சரிவால் பிரதான வீதியின் போக்குவரத்து பாதிப்பு
வீதியில் குவிந்துள்ள மண்மேட்டை அகற்றுவதற்கான பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.

சீரற்ற வானிலை காரணமாக நுவரெலியா - உடப்புசல்லாவை பிரதான வீதியிலுள்ள சந்திரகாந்தி பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, குறித்த வீதியூடான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.
வீதியில் குவிந்துள்ள மண்மேட்டை அகற்றுவதற்கான பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.