தங்கத்தின் விலையில் மீண்டும் உயர்வு; இன்றைய நிலவரம்
இலங்கையில் கடந்த சில மாதங்களாக சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கத்தின் விலையானது இன்று (29) சற்று அதிகரித்துள்ளது.

இலங்கையில் கடந்த சில மாதங்களாக சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கத்தின் விலையானது இன்று (29) சற்று அதிகரித்துள்ளது.
இதனடிப்படையில், இன்றைய (29) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 711,378 ரூபாயாக காணப்படுகின்றது.
அத்தோடு, 24 கரட் தங்க கிராம் 25,100 ரூபாயாக பதிவாகியுள்ள அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 200,750 ரூபாயாக பதிவாகியுள்ளது.
அதேபோல 22 கரட் தங்க கிராம் 23,010 ரூபாயாக பதிவாகியுள்ளதுடன், 22 கரட் தங்கப் பவுண் 184,100 ரூபாயாக பதிவாகியுள்ளது.
21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 21,970. ரூபாயாக பதிவாகியுள்ளதுடன், 21 கரட் தங்கப் பவுண் 175,700 ரூபாயாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.