முட்டைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படுமா? இறைச்சி விலையும் உயர்வு!
கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் சில இடங்களில் கோழி இறைச்சி ஒரு கிலோகிராம் 1420 ரூபாய் வரை உயர்வடைந்துள்ளது.
அண்மையில் இலங்கையில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு கோழிகள் அதிக அளவில் இறந்ததால், எதிர்காலத்தில் முட்டைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன இதனைத் தெரிவித்துள்ளதுடன், முட்டைகளின் விலை ஏற்கெனவே அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், பண்டிகைக் காலத்தில் கேக்குகளின் உற்பத்தியும் இதனால் பாதிக்கக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் சில இடங்களில் கோழி இறைச்சி ஒரு கிலோகிராம் 1420 ரூபாய் வரை உயர்வடைந்துள்ளது.
இந்த நிலையில், கோழியிறைச்சி மற்றும் முட்டைகளில் விலையை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.