தங்கத்தின் விலையில் திடீர் உயர்வு... இன்றைய நிலவரம் இதோ!
நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்த நிலையில், இன்று சற்று உயர்ந்துள்ளது.

தங்கம் விலை கடந்த மாதத்தில் அதிகரித்துடன் அட்சய திருதியை முன்னிட்டு தங்கம் விலை ஒரே நாளில் மூன்று முறை அதிகரித்து அதிர்ச்சியளித்தது.
இதைத்தொடர்ந்து நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்த நிலையில், இன்று சற்று உயர்ந்துள்ளது.
அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.53,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.6,655-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ரூ.96-க்கு விற்பனை செய்யப்படுகிறது.