தங்கத்தின் விலையில் இன்று ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்: இன்றைய தங்க நிலவரம்
நாட்டில் தங்கத்தின் விலையானது கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.

நாட்டில் தங்கத்தின் விலையானது கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.
அந்தவகையில், முன்னைய தினங்களுடன் ஒப்பிடுகையில், இன்று (27) தங்கத்தின் விலையானது சற்று வீழ்ச்சி கண்டுள்ளது.
இன்றைய நிலவரத்தின் படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 755,156 ரூபாயாகவும், 24 கரட் தங்க கிராம் 26,640 ரூபாயாக பதிவாகியுள்ளது.
24 கரட் தங்கப் பவுண் 213,100 ரூபாயாக பதிவாகியுள்ளதுடன், 22 கரட் தங்க கிராம் 24,420 ரூபாயாக உள்ளது.
22 கரட் தங்கப் பவுண்195,400 ரூபாவாக பதிவாகியுள்ளது. 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 23,310 ரூபாயாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் 186,500 ரூபாயாக பதிவாகியுள்ளது.
அத்துடன், கொழும்பு செட்டியார் தெரு தங்க நிலவரங்களின் படி 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 201,500 ரூபாயாக பதிவாகியுள்ளது.
அங்கு 22 கரட் பவுண் ஒன்று 186,400 ரூபாயாக பதிவாகியுள்ளது. எனினும் தங்க ஆபரணங்களின் விலை இந்த விலைகளிலிருந்து மாற்றமடையலாம்.