தங்க விலையில் திடீர் அதிகரிப்பு -  இன்று ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றம்

இலங்கையில் சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கத்தின் விலை இன்று (10) அதிகரித்துள்ளது.

செப்டெம்பர் 10, 2024 - 16:48
தங்க விலையில் திடீர் அதிகரிப்பு -  இன்று ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றம்

இலங்கையில் சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கத்தின் விலை இன்று (10) அதிகரித்துள்ளது.

நேற்று (09) திங்கட்கிழமை நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 747,490 ரூபாயாகவும், 24 கரட் கிராம் தங்கத்தின் விலை 26,370 ரூபாயாகவும், 24 கரட் தங்கப் பவுண்  210,950 ரூபாயாகவும் காணப்பட்டது.

அத்துடன், 22 கரட் தங்க கிராம் 24,180 ரூபாயாகவும்  22 கரட் தங்கப் பவுண் 193,400 ரூபாயாகவும் பதிவானதுடன்,  21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 23,080 ரூபாயாகவும், 21 கரட் தங்கப் பவுண் 184,600 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.

இந்த நிலையில், நேற்றுடன் ஒப்பிடும் போது தங்கத்தின் விலை இன்று (10) செவ்வாய்க்கிழமை சற்று அதிகரித்து உள்ளது.

அதன்டி, இன்றைய நிலவரத்தின்படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 752,573 ரூபாயாகவும், 24 கரட் கிராம் தங்கத்தின் விலை 26,550 ரூபாயாகவும், 24 கரட் தங்கப் பவுண்  212,400 ரூபாயாகவும் காணப்பட்டது.

அத்துடன், 22 கரட் தங்க கிராம் 24,34  ரூபாயாகவும்  22 கரட் தங்கப் பவுண் 194,700 ரூபாயாகவும் பதிவானதுடன்,  21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 23,240 ரூபாயாகவும், 21 கரட் தங்கப் பவுண் 185,850 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!