இலங்கை ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்!
நேற்றுடன் (17) ஒப்பிடும் போது இன்று(18) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி திடீரென உயர்வடைந்துள்ளது.

நேற்றுடன் (17) ஒப்பிடும் போது இன்று(18) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி திடீரென உயர்வடைந்துள்ளது.
இந்த நிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (18) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 325.69 ரூபாயாகவும், கொள்வனவு விலை 316.07 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.
மேலும், கனடா டொலரின் விற்பனை விலை 243.00 ரூபாயாகவும், கொள்வனவு விலை 232.51 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.
இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 356.73 ரூபாயாகவும், கொள்வனவு பெறுமதி 342.58 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.
அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 414.95 ரூபாயாகவும், கொள்வனவு பெறுமதி 399.26 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.