லிட்ரோ எரிவாயு நிறுவனம் வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு
சந்தையில் தற்போது போதுமான எரிவாயு கையிருப்பு உள்ளதாகவும், நிரப்பும் செயல்முறை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் லிட்ரோ நிறுவனம் கூறுகிறது.
சந்தையில் தற்போது போதுமான எரிவாயு கையிருப்பு உள்ளதாகவும், நிரப்பும் செயல்முறை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் லிட்ரோ நிறுவனம் கூறுகிறது.
லிட்ரோ நிறுவனம் அறிக்கையொன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.
போக்குவரத்து பாதிக்கப்படாத பகுதிகளில் எரிவாயு விநியோகம் வழக்கம் போல் உள்ளதுடன், போக்குவரத்து பாதிப்பு உள்ள பகுதிகளில் பாதை சீர் செய்யப்பட்டவுடன் எரிவாயு விநியோகத்தை மீண்டும் முன்னெடுக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை, உங்கள் பகுதியில் தற்போதைய எரிவாயு விநியோகம் குறித்த தகவல்களை அறிய 1311 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு அழைக்குமாறு லிட்ரோ நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு மேலும் தெரிவித்துள்ளது.