மாணவிகளுக்கு தண்டனை கொடுத்த ஆசிரியையிடம் விசாரணை

மாணவிகளின் பெற்றோர், செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏப்ரல் 24, 2025 - 16:43
ஏப்ரல் 24, 2025 - 16:49
மாணவிகளுக்கு தண்டனை கொடுத்த ஆசிரியையிடம் விசாரணை

பாடசாலையில் காலையில் நடைபெற்ற விளையாட்டு பயிற்சியில் சுகயீனம் காரணமாக பங்கு பற்றாத மாணவிகள் சிலரை ஆசிரியை ஒருவர் தண்டித்துள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த மாணவிகளை, அந்த ஆசிரியை பாடசாலை நேரம் முடிவடையும் வரை வெயிலில் முழங்காலில் வைத்துள்ளதாக மொரகொட பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிங்க | 2015 ஆம் ஆண்டு சூட்கேஸ் கொலை - குற்றவாளிக்கு மரண தண்டனை

அநுராதபுரம் மொரகொட கெக்கிராவை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் 6 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவிகளே இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் மாணவிகளின் பெற்றோர், செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் மொரகொட பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!