2015 ஆம் ஆண்டு சூட்கேஸ் கொலை - குற்றவாளிக்கு மரண தண்டனை
தண்டனை விதிக்கப்படுவதற்கு முன்பு நீதிமன்றத்தில் ஆஜரான பிரதிவாதி, குற்றச்சாட்டுகளில் தான் நிரபராதி என்று கூறினார்.

2015 ஆம் ஆண்டு கொழும்பு ஹெட்டி வீதியில் உள்ள விடுதியில் பெண்ணை கொலை செய்து அவரது உடலை பெஸ்டியன் மாவத்தை பேருந்து நிலையத்தில் சூட்கேஸில் அடைத்து வீசிய சம்பவத்தில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட நபருக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
ஜூலை 29, 2015 அன்று தர்மராஜா கார்த்திகா என்ற பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, பிரதிவாதியான பேட்ரிக் கிருஷ்ணராஜா மீது கொழும்பு உயர் நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
நீண்ட விசாரணைக்குப் பிறகு, கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி ஆதித்யா படடபெந்திகே தீர்ப்பை அறிவித்து, பிரதிவாதி தொடர்புடைய குற்றச்சாட்டுகளில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதாகக் கூறினார்.
தண்டனை விதிக்கப்படுவதற்கு முன்பு நீதிமன்றத்தில் ஆஜரான பிரதிவாதி, குற்றச்சாட்டுகளில் தான் நிரபராதி என்று கூறினார்.
இருப்பினும், குற்றம் சாட்டப்பட்டவர் மீது அரசுத் தரப்பால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதால், அவர் அந்தக் குற்றச்சாட்டுகளில் குற்றவாளி எனக் கண்டறியப்பட்டு, அதன்படி அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படுவதாக நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்தார். (நியூஸ்21)