அடுத்த இருபத்தி நான்கு மணி நேரத்திற்குள் களனி ஆற்றுப் படுகையின் தாழ்வான பகுதிகளில் இந்த வெள்ள நிலைமை ஏற்படக்கூடும் என்று நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரித்துள்ளது.
நாடு முழுவதும் நிலவும் கடுமையான வானிலை காரணமாக, இன்று (நவம்பர் 28) காலை 6 மணி முதல் அனைத்து வழித்தடங்களிலும் உள்ள அனைத்து ரயில் சேவைகளையும் ரயில்வே திணைக்களம் நிறுத்தியுள்ளது.
பாலர் பாடசாலைகள் உட்பட அனைத்து முன்பள்ளிப் பருவ அபிவிருத்தி நிலையங்களுக்கும் நாளை (28) முதல் விடுமுறை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு நாட்களாக நாடு முழுவதும் நிலவும் மோசமான வானிலை காரணமாக இதுவரை பதிவான இறப்புகளின் எண்ணிக்கை 47 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
பதுளை மாவட்டத்தில் கடந்த சில நாட்களில் ஏற்பட்ட பல மண்சரிவுகள் காரணமாக பலர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் பலர் காணாமல் போயுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.