பாடசாலை மாணவர்களுக்கான இலவச சீருடை விநியோகம் ஜன. 19 இல் ஆரம்பம்

சீன மக்கள் குடியரசின் முழுமையான அன்பளிப்பாக 11.484 மில்லியன் மீட்டர் அளவிலான சீருடைத் துணிகள் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், அவை அனைத்தும் தற்போது துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.

ஜனவரி 9, 2026 - 10:53
பாடசாலை மாணவர்களுக்கான இலவச சீருடை விநியோகம் ஜன. 19 இல் ஆரம்பம்

2026ஆம் ஆண்டிற்கான பாடசாலை மாணவர்களுக்கான இலவச சீருடை விநியோகத்தை, இம்முறை ஜனவரி மாதத்திலேயே வழங்குவதற்கு கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது.

அரச மற்றும் அரசின் அனுசரணையின் கீழ் இயங்கும் பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களுடன், நாடளாவிய ரீதியில் அரச அங்கீகாரம் பெற்ற பிரிவெனாக்களில் கல்வி கற்கும் பிக்கு மாணவர்கள் மற்றும் ஏனைய மாணவர்களுக்கும் இந்த இலவச சீருடைகள் வழங்கப்படவுள்ளன.

இம்முறை சீருடை விநியோகத்திற்குத் தகுதி பெற்றுள்ள மாணவர்கள் எண்ணிக்கை சுமார் 4,418,404 ஆகும். 

சீன மக்கள் குடியரசின் முழுமையான அன்பளிப்பாக 11.484 மில்லியன் மீட்டர் அளவிலான சீருடைத் துணிகள் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், அவை அனைத்தும் தற்போது துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.

இந்த சீருடைத் துணிகளை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்கும் நிகழ்வு, எதிர்வரும் 13ஆம் திகதி கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரின் தலைமையில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 19ஆம் திகதி முதல் இந்த சீருடைத் துணிகள், கோட்டக் கல்வி அலுவலகங்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!