Breaking News: களனி ஆற்றுப் படுகைகளில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு - மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

அடுத்த இருபத்தி நான்கு மணி நேரத்திற்குள் களனி ஆற்றுப் படுகையின் தாழ்வான பகுதிகளில் இந்த வெள்ள நிலைமை ஏற்படக்கூடும் என்று நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரித்துள்ளது.

நவம்பர் 28, 2025 - 13:39
Breaking News: களனி ஆற்றுப் படுகைகளில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு - மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

கனமழை காரணமாக களனி ஆற்றின் மேல் படுகையிலுள்ள நீர்த்தேக்கங்களில் இருந்து வெளியேற்றப்படும் நீர் காரணமாக, அண்மைய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக ஆபத்துள்ள வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளது.

அடுத்த இருபத்தி நான்கு மணி நேரத்திற்குள் களனி ஆற்றுப் படுகையின் தாழ்வான பகுதிகளில் இந்த வெள்ள நிலைமை ஏற்படக்கூடும் என்று நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரித்துள்ளது.

சுற்றுப்புறங்களில் வசிக்கும் மக்கள் அங்கிருந்து உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!