பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு
இலங்கையில் நிலவும் அனர்த்த நிலை காரணமாக மூன்றாம் தவணையின் இறுதி கட்ட பாடசாலைகள் டிசம்பர் 16 வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன என்று
இலங்கையில் நிலவும் அனர்த்த நிலை காரணமாக மூன்றாம் தவணையின் இறுதி கட்ட பாடசாலைகள் டிசம்பர் 16 வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன என்று கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவா தெரிவித்தார்.
முன்னதாக டிசம்பர் 8 ஆம் திகதியன்று திறக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த பாடசாலைகள் புதிய அறிவிப்பின்படி தாமதமானது. அதேவேளை, உயர்தரப் பரீட்சைகள் மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, உயர்தரப் பரீட்சையை மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்க கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், திகதிகள் பின்னர் அறிவிக்கப்படும்.
அத்துடன், மோசமான வானிலை காரணமாக இலங்கை முழுவதும் உள்ள சர்வதேச பாடசாலைகளையும் உடனடியாக மூடுமாறு கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.