வறட்சியின் காரணமாக ஏராளமான நெற்செய்கைகள் அழிந்து வைக்கோலாக மாறியுள்ளதாகவும், கால்நடைகளுக்கு உண்பதற்கு புல் இல்லை எனவும், ஆடு போன்ற விலங்குகளுக்கு இலைகள் இல்லை எனவும், குடிநீரின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தின் அனுசரணையுடன் மாங்குளம் ரயில் நிலைய அதிபர் கலைவேந்தனால் முதற் தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த சிரமதான நிகழ்வில், ரயில்வே திணைக்கள அத்தியட்சகர் நிரந்த விசுந்தரவுடன், மாங்குளம் மக்களும் கலந்துகொண்டனர்
தாம் கோரிய நீதியை வெளிநாட்டவர்கள் பெற்றுத்தருவார்கள் என மன்னார் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் தலைவி மனுவெல் உதயச்சந்திரா நம்பிக்கை வெளியிட்டார்
முகமூடி அணிந்த கும்பல் வந்து வீட்டிற்கு தீ வைத்தது சிசிடிவி காட்சிகளில் தெரியவந்துள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
தீபச்செல்வன் எழுதிய ‘பதுங்கு குழியில் பிறந்த குழந்தை’, ‘நான் ஸ்ரீலங்கன் இல்லை’ ஆகிய கவிதைத் தொகுப்புகளும், ‘நடுகல்’ என்ற நாவலும் தமிழ் வாசகப் பரப்பில் மிகுந்த கவனம் பெற்றவை. சமீபத்தில் அவர் எழுதிய ‘பயங்கரவாதி’ நாவல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கின்றது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்வரும் ஜூலை மாதம் முதல் வாரத்தில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு வருகை தரவுள்ளார் என, முல்லைத்தீவு மாவட்ட பதில் அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தெரிவித்தார்.