வடக்கில் மேலும் மோசமாகும் வறட்சி... குடிநீரின்றி தவிக்கும் நிலை

வறட்சியின் காரணமாக ஏராளமான நெற்செய்கைகள் அழிந்து வைக்கோலாக மாறியுள்ளதாகவும், கால்நடைகளுக்கு உண்பதற்கு புல் இல்லை எனவும், ஆடு போன்ற விலங்குகளுக்கு இலைகள் இல்லை எனவும், குடிநீரின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வடக்கில் மேலும் மோசமாகும் வறட்சி... குடிநீரின்றி தவிக்கும் நிலை
ADVERTISEMENT
ADVERTISEMENT

நாட்டின் பல மாகாணங்களில் நிலவும் கடும் வரட்சியானது வட பிராந்தியத்தையும் பாதித்துள்ளதுடன், தற்போது வடக்கில் 22,666 குடும்பங்களைச் சேர்ந்த 72,357 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையங்களின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வடக்கில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட மக்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி பிரதேசங்களில் உள்ள குளங்களில் நீர் மிக வேகமாக வற்றிவிட்டதாகவும், குடிநீர் விநியோகம் செய்யப்படும் கிணறுகள் உட்பட பல நீர் ஆதாரங்கள் முற்றாக வற்றிவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வறட்சியின் காரணமாக ஏராளமான நெற்செய்கைகள் அழிந்து வைக்கோலாக மாறியுள்ளதாகவும், கால்நடைகளுக்கு உண்பதற்கு புல் இல்லை எனவும், ஆடு போன்ற விலங்குகளுக்கு இலைகள் இல்லை எனவும், குடிநீரின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கடும் வரட்சி காரணமாக வடபகுதி மக்களின் மா, வாழை, தென்னை போன்ற தோட்டங்களும் அழிந்து வருவதோடு, அந்த மாகாணங்களில் உள்ள பெரிய ஏரிகளும் கிரிக்கெட் மைதானங்களாக காட்சியளிக்கத் தொடங்கியுள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT

குடிநீர் வழங்க முடியாத மாகாணங்களில் உள்ள மக்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்படுவதாகவும், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் நீர் ஆதாரங்களோ அல்லது வேறு நீர் உற்பத்தி செய்யும் இடங்களோ இல்லை எனவும் அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT