உலகம் முழுவதும் இயற்கை பேரழிவுகள் அதிகரித்து வரும் நிலையில், பல நாடுகள் தொடர்ந்து வெள்ளம், நிலநடுக்கம் மற்றும் சுனாமி போன்ற அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வருகின்றன.
கிராம உத்தியோகத்தர்கள் ஊடாகவும் குடிநீர் பிரச்சினைகளுக்கான தீர்வுகளைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
73 நீர்த்தேக்கங்களின் நீர் கொள்ளளவு 29 வீதம் வரை குறைவடைந்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் கடும் வறட்சி காரணமாக அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
வறட்சியின் காரணமாக ஏராளமான நெற்செய்கைகள் அழிந்து வைக்கோலாக மாறியுள்ளதாகவும், கால்நடைகளுக்கு உண்பதற்கு புல் இல்லை எனவும், ஆடு போன்ற விலங்குகளுக்கு இலைகள் இல்லை எனவும், குடிநீரின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.