எல் நினோ அபாயம்: பெருவில் 40% மாவட்டங்களில் அவசர நிலை பிரகடனம்

எல் நினோ காலநிலை மாற்றத்தால் ஏற்படும் கடும் மழை மற்றும் வெள்ள அபாயத்தை எதிர்கொண்டு, பெரு நாட்டின் 40% மாவட்டங்களில் அரசு 60 நாட்கள் அவசர நிலை பிரகடனம் செய்துள்ளது.

எல் நினோ அபாயம்: பெருவில் 40% மாவட்டங்களில் அவசர நிலை பிரகடனம்
ADVERTISEMENT
ADVERTISEMENT

எல் நினோ (El Niño) என்பது மத்திய மற்றும் கிழக்கு பசிபிக் பெருங்கடலில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை வழக்கத்தை விட அசாதாரணமாக அதிகரிக்கும் ஒரு இயற்கை காலநிலை நிகழ்வாகும். இது பொதுவாக 2 முதல் 7 ஆண்டுகளுக்கு ஒருமுறை உருவாகும்.

பூமத்திய ரேகை பகுதியில் கிழக்கிலிருந்து மேற்காக வீசும் வர்த்தகக் காற்றுகள் (Trade winds) வலுவிழக்கும் போது இந்த நிலை உருவாகிறது. இதனால் தென் அமெரிக்காவின் பெரு கடற்கரைப் பகுதிகளில் மேலே எழும் குளிர்ந்த, ஊட்டச்சத்துகள் நிறைந்த கடல் நீரின் இயல்பான சுழற்சி பாதிக்கப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இந்த காலநிலை மாற்றம் உலகளாவிய வானிலை முறைகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஆஸ்திரேலியா, இந்தோனேசியா மற்றும் இந்தியாவின் சில பகுதிகளில் வறட்சி ஏற்படக்கூடும் நிலையில், அமெரிக்காவின் சில பகுதிகளில் அதிக மழை மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், கடும் மழை மற்றும் காலநிலை பாதிப்பு அபாயம் காரணமாக தென் அமெரிக்க நாடான Peru அரசு அவசர நிலையை அறிவித்துள்ளது. நாட்டின் சுமார் 40 சதவீத மாவட்டங்களில் இந்த உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மொத்தம் 796 மாவட்டங்களில் 60 நாட்களுக்கு அவசர நிலை நீடிக்கும் எனவும், இது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் மீட்பு பணிகளை விரைவுபடுத்த உதவும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT