வறட்சியால் நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் தொடர்ந்தும் குறைவு

73 நீர்த்தேக்கங்களின் நீர் கொள்ளளவு 29 வீதம் வரை குறைவடைந்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.

வறட்சியால் நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் தொடர்ந்தும் குறைவு
ADVERTISEMENT
ADVERTISEMENT

வறட்சியான காலநிலை காரணமாக இலங்கையின் 73 நீர்த்தேக்கங்களின் நீர் கொள்ளளவு 29 வீதம் வரை குறைவடைந்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.

சமனலவாவி நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் 2.5 வீதமாக குறைந்துள்ளதுடன், சமனலவாவியில் இருந்து நீரை விநியோகிக்கும் உடவளவ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டமும் 2.8 வீதமாக உள்ளதாக திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இதனையடுத்து, நாட்டின் பல மாவட்டங்களில் குடிநீர் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

வறட்சியால் 15 மாவட்டங்களிலுள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், வட மாகாணத்தின் யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களைச் சேர்ந்த 75,287 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக எதிர்நோக்கியுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் கூறியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இதேவேளை, வறட்சியால் மனிதர்கள் மட்டும் இன்றி விலங்குகளும் கடும் பாதிப்புக்குள்ளாகிள்ளன.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT