வவுனியாவில் வீட்டுக்கு தீ வைப்பு: யுவதி பலி; 9 பேர் காயம்

முகமூடி அணிந்த கும்பல் வந்து வீட்டிற்கு தீ வைத்தது சிசிடிவி காட்சிகளில் தெரியவந்துள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் வீட்டுக்கு தீ வைப்பு: யுவதி பலி; 9 பேர் காயம்
ADVERTISEMENT
ADVERTISEMENT

பிறந்தநாள் விழா நடைபெற்றுக் கொண்டிருந்த வீட்டிற்கு இனந்தெரியாத குழுவினரால் தீ வைக்கப்பட்டதில் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 9 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான சம்பவம் இன்று (23) அதிகாலை வவுனியா தோணிக்கல் பகுதியில் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

உயிரிழந்தவர் ஓமந்த பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடையவர்.

தீ விபத்தில் காயமடைந்தவர்களில் தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த 02 வயது சிறுவன், 07 மற்றும் 13 வயதுடைய இரண்டு சிறுமிகள், 19 முதல் 41 வயதுக்கு இடைப்பட்ட 04 பெண்கள் மற்றும் 42 வயதுடைய ஆண் ஒருவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும், ஓமந்த பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடைய ஒருவரும் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

வவுனியா தோணிக்கல் பகுதியில் உள்ள வீடொன்றில் தீ பரவியுள்ளதாக வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த 119 அவசர தகவல் ஊடாக பொலிஸார் இந்த நிலையத்திற்கு அறிவித்துள்ளனர்.

உடனடியாக செயற்பட்ட பொலிஸார், வவுனியா நகரசபையின் தீயணைப்பு பிரிவினர் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தீயை அணைத்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

தீ விபத்து ஏற்பட்ட போது மேற்படி வீட்டில் பிறந்தநாள் விழா நடைபெற்றுக் கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

முகமூடி அணிந்த கும்பல் வந்து வீட்டிற்கு தீ வைத்தது சிசிடிவி காட்சிகளில் தெரியவந்துள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT