யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த வான் விபத்து - மூவர் உயிரிழப்பு

ஏ-9 வீதியில் மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  பனிச்சங்குளம் பகுதியில் இன்று(15) அதிகாலை ஏற்பட்ட விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். 

யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த வான் விபத்து - மூவர் உயிரிழப்பு
ADVERTISEMENT
ADVERTISEMENT

ஏ-9 வீதியில் மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  பனிச்சங்குளம் பகுதியில் இன்று(15) அதிகாலை ஏற்பட்ட விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். 

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியின் பின்பகுதியில் வான் மோதியுள்ளது. இதனால், குறித்த லொறிக்கு முன்னால் சென்ற மற்றுமொரு லொறியுடன் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இதன்போது, பின்னால் இருந்த லொறியின் சாரதி வாகனத்தை விட்டு இறங்கிய நிலையில், இரண்டு லொறிகளுக்கு இடையில் சிக்கி பலத்த காயங்களுக்கு உள்ளானதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

அத்துடன், லொறியின் பின்பகுதியில் பயணித்த ஒருவரும், வானின் முன் இருக்கையில் பயணித்த நபரும் படுகாயமடைந்த நிலையில், மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளனர்.

முல்லேரியா, வெல்லம்பிட்டி மற்றும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 38, 46 மற்றும் 58 வயதுடையவர்களே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர். வான் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT