முதல் வாய்ப்பில் சொதப்பிய சுப்மன் கில்.. ராகுல் டிராவிட்டின் கணக்கு தப்பானதா?
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 162 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான இடத்தில் உள்ளது. இந்திய அணியின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 143 ரன்களுடனும், விராட் கோலி 36 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 162 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான இடத்தில் உள்ளது. இந்திய அணியின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 143 ரன்களுடனும், விராட் கோலி 36 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.
இரண்டாம் நாள் ஆட்டத்தை இந்திய அணி ஒட்டுமொத்தமாக தன்வசப்படுத்தியுள்ளது. இருப்பினும் இளம் வீரர் சுப்மன் கில் வெறும் 6 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றியுள்ளார்.
ஏனென்றால் புஜாராவை நீக்கிய இந்திய அணி, அவரது இடத்தில் இளம் வீரரான சுப்மன் கில்லை களமிறக்குவோம் என்று அறிவித்தது.
அனுபவ வீரரான புஜாராவின் இடத்தை சுப்மன் கில்லை களமிறக்கும் முடிவை எடுத்ததன் மூலம், புஜாராவுக்கான கதவுகள் அடைக்கப்பட்டுவிட்டதாக உணர்ந்துகொள்ள முடிகிறது. ஆனால் சுப்மன் கில் 3வது இடத்தில் சிறப்பாக செயல்பட வேண்டிய தேவையும் உள்ளது.
12 வருஷம் முன்னாடி தந்தை… இப்போது மகன்… தந்தை-மகன் இருவரின் விக்கெட்டை வீழ்த்திய அஸ்வின்...!
அதற்கான முதல் வாய்ப்பாக தான் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் சுப்மன் கில் 3வது இடத்தில் களமிறக்கப்பட்டார். அதிகளவில் அச்சுறுத்தல் கொடுக்காத வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் நன்றாக விளையாடினால் சுப்மன் கில்லும் மன உறுதி அதிகரிக்கும்.
அதன்பின்னர் உள்நாட்டில் விளையாடும் போட்டிகளில் கில் நன்றாக விளையாடுவார் என்று கணிக்கப்பட்டது. அதுதான் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் கேப்டன் ரோகித் சர்மாவின் திட்டமாகவும் இருந்தது.
ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் 3வது வரிசையில் களமிறங்கிய சுப்மன் கில் வெறும் 6 ரன்களில் ஆட்டமிழந்து அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் 3வது இடத்தில் களமிறங்கும் வீரரின் கைகளில் தான் அணியின் அச்சாணி இருக்கும். ஆட்டம் எந்தப் பக்கம் திரும்பும் என்பதை அவரின் ஆட்டமே முடிவு செய்யும். அப்படியான இடத்தில் கில் தொடர்ந்து சொதப்பினால், இந்திய அணி என்ன செய்யும் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.