உணவுப்பொருட்களின் விலைகள் சடுதியாக அதிகரிப்பு

பண்டிகை காலம் நெருங்கியுள்ள நிலையில் சந்தையில் இறைச்சி, முட்டை மற்றும் வெங்காயத்தின் விலைகள் அதிகரித்துள்ளது.

டிசம்பர் 14, 2023 - 01:21
உணவுப்பொருட்களின் விலைகள் சடுதியாக அதிகரிப்பு

கிறிஸ்துமஸ் மற்றும் புதுவருட பண்டிகை காலம் நெருங்கியுள்ள நிலையில் சந்தையில் இறைச்சி, முட்டை மற்றும் வெங்காயத்தின் விலைகள் அதிகரித்துள்ளது.

சந்தையில் ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்தின் சில்லறை விலையும் தற்போது அதிகரித்துள்ளது. இன்று ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயம் 440 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது. 

மேலும், கோழி இறைச்சியின் விலையும் சந்தையில் வேகமாக அதிகரித்துள்ளது. எதிர்வரும் வாரங்களில் விலை மேலும் உயரும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, நாட்டின் பல பகுதிகளில் இன்றும் முட்டைகள் 55 ரூபாய்க்கு மேல் விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றது.

இந்த நிலையில், இறக்குமதி செய்யப்பட்ட 6 மில்லியன் முட்டைகள்  சதொச ஊடாக இன்று (13)  மற்றும் நாளை(14) சந்தையில் விற்பனை செய்யப்பட உள்ளதாக கூறப்படுகின்றது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!