உக்ரேனியத் தலைநகர் கீவ்வில் பாரிய வெடிப்புச் சத்தங்கள்
ஆகாயத் தாக்குதலுக்கான எச்சரிக்கை ஒலியும் அங்கு தொடர்ந்து கேட்டுள்ளதுடன், ரஷ்யாவின் போர்க்கப்பல் கருங்கடலில் மூழ்கியதைத் தொடர்ந்து அந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

உக்ரேனியத் தலைநகர் கீவ்வில் இன்று (15 ஏப்ரல்) அதிகாலை பாரிய வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
ஆகாயத் தாக்குதலுக்கான எச்சரிக்கை ஒலியும் அங்கு தொடர்ந்து கேட்டுள்ளதுடன், ரஷ்யாவின் போர்க்கப்பல் கருங்கடலில் மூழ்கியதைத் தொடர்ந்து அந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கீவ் நகரைச் சுற்றியிருந்த ரஷ்யப் படையினர் இம்மாதத் தொடக்கத்தில் மீட்டுக் கொள்ளப்பட்டனர். தெற்கிலும், கிழக்கிலும் சண்டையிட அவர்கள் தயாராவதாகச் சொல்லப்பட்ட நிலையில், கீவ் நகரில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அதனால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து உடனடியாகத் தெரியவில்லை. கீவ் நகரின் சில இடங்களில் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக உக்ரேனிய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
சில இடங்களில் அமைதி நிலவினாலும், நள்ளிரவுக்குப் பிறகு, உக்ரேனின் எல்லாப் பகுதிகளிலும், குறிப்பாக கிழக்கின் லுஹான்ஸ்க் (Luhansk) உள்ளிட்ட இடங்களிலும் எச்சரிக்கை ஒலி கேட்டதாக அவை கூறியுள்ளன.