மொடல் அழகி பியூமியை செப். 20 வரை கைதுசெய்ய மாட்டோம்!

பியுமி ஹன்சமாலி தனது மனுவின் மூலம், தனது சொத்துக் குவிப்பு தொடர்பான விசாரணைகளை சிஐடியின் சட்டவிரோத சொத்துக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நிறுத்தி வைக்க உத்தரவிடுமாறு கோரியுள்ளார்.

ஜுலை 16, 2024 - 13:38
மொடல் அழகி பியூமியை செப். 20 வரை கைதுசெய்ய மாட்டோம்!

பியூமி ஹன்சமாலி

மொடல் அழகி பியூமி ஹன்சமாலியின் ரிட் மனு, செப்டெம்பர் மாதம் 20ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் வரை அவரைக் கைது செய்ய மாட்டோம் என மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் உறுதியளித்துள்ளார். 

எவ்வாறாயினும், இந்த உறுதிமொழியானது தற்போது நடைபெற்று வரும் சிஐடி விசாரணைகளை பாதிக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகத்திற்கிடமான முறையில் சொத்து சேர்த்ததாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துகள் விசாரணைப் பிரிவினரால் நடத்தப்பட்ட விசாரணைகளில் தன்னை கைது செய்வதை தடுக்குமாறு கோரி பியூமி ஹன்சமாலி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

தொடர்புடைய செய்தி : மொடல் பியூமி ஹன்சமாலியின் வங்கி கணக்குகளை சோதிக்க CIDக்கு அனுமதி

இந்த மனு நேற்று (15) பரிசீலிக்கப்பட்ட போதே, மேற்படி செப்டெம்பர் மாதம் 20ஆம் திகதி வரை அவர் கைதுசெய்யப்பட மாட்டார் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. 

மனுதாரர் பியூமி ஹன்சமாலி சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ரொனால்ட் பெரேரா ஆஜராகியிருந்தார். 

பியுமி ஹன்சமாலி தனது மனுவின் மூலம், தனது சொத்துக் குவிப்பு தொடர்பான விசாரணைகளை சிஐடியின் சட்டவிரோத சொத்துக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நிறுத்தி வைக்க உத்தரவிடுமாறு கோரியுள்ளார்.

தொடர்புடைய செய்தி சிஐடி விசாரணை: பியூமி ஹன்சமாலி மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!