மொடல் பியூமி ஹன்சமாலியின் வங்கி கணக்குகளை சோதிக்க CIDக்கு அனுமதி

80  மில்லியன் ரூபாய் பெறுமதியான  ரேஞ்ச் ரோவர் ரக வாகனம் மற்றும் கொழும்பில் 140 மில்லியன் ரூபாய் பெறுமதியான வீடு உள்ளிட்ட சொத்துகளை திட்டமிட்ட குற்றச் செயல்கள் மூலம் பியூமி ஹன்சமாலி பெற்று வைத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

ஜுன் 20, 2024 - 13:02
ஜுன் 20, 2024 - 13:04
மொடல் பியூமி ஹன்சமாலியின் வங்கி கணக்குகளை சோதிக்க CIDக்கு அனுமதி

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மூலம் கணிசமான சொத்துகளை சம்பாதித்துள்ளார் என்ற குற்றச்சாட்டைத் தொடர்ந்து, மாடல் அழகி பியூமி ஹன்சமலியின் 19 கணக்குகளின் பதிவுகளைப் பெறுவதற்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID), மாளிகாகந்த நீதவான் மஞ்சுளா திலகரத்ன அனுமதி வழங்கினார்.

இந்தக் கணக்குகள் நாட்டில் உள்ள 08 முன்னணி வங்கிகளில் உள்ளன. 

பியூமி ஹன்சமாலி, 80  மில்லியன் ரூபாய் பெறுமதியான  ரேஞ்ச் ரோவர் (range rover) ரக வாகனம் உள்ளிட்ட கணிசமான சொத்துகளை வாங்கியதாக எழுந்த குற்றச்சாட்டுகள் மீது விசாரணை கவனம் செலுத்துகிறது. 

தவிர, கொழும்பில் 140 மில்லியன் ரூபாய் பெறுமதியான வீடு உள்ளிட்ட சொத்துகளை திட்டமிட்ட குற்றச் செயல்கள் மூலம் பியூமி ஹன்சமாலி பெற்று வைத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

இந்த விசாரணையானது, ஹன்சமாலியின் பல வங்கிக் கணக்குகளில் குறுகிய காலத்தில் வைப்பிலிடப்பட்ட நிதியின் மூலத்தைக் கண்டுபிடிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!