சிஐடி விசாரணை: பியூமி ஹன்சமாலி மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு
பியூமி ஹன்சமாலி: இந்த மனுவில் பொலிஸ் மா அதிபர் (IGP) மற்றும் CID பணிப்பாளர் உட்பட பல அதிகாரிகள் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

பியூமி ஹன்சமாலி
மொடல் அழகி பியூமி ஹன்சமாலி, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (சிஐடி) சட்டவிரோத சொத்துப் புலனாய்வுப் பிரிவின் விசாரணையை இடைநிறுத்த உத்தரவிடக் கோரி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவில் பொலிஸ் மா அதிபர் (IGP) மற்றும் CID பணிப்பாளர் உட்பட பல அதிகாரிகள் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
தனது மனுவில், தனக்கு எதிரான சிஐடியின் சட்டவிரோத சொத்துக் குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணை அநியாயமாக நடத்தப்படுவதாகவும், இதனால் தனக்கு கடும் பாரபட்சம் ஏற்பட்டுள்ளதாகவும் ஹன்சமாலி தெரிவித்துள்ளார்.
கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கை மறுஆய்வு செய்யுமாறும், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வரும் விசாரணையை இடைநிறுத்துமாறு உத்தரவு பிறப்பிக்குமாறும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தை மனுதாரர் கோரியுள்ளார்.