மணமகளை தூக்கி கொண்டு ஓடிய மணமகன்

இரு வீட்டாருக்கும் இடையே நடைபெற்ற சண்டையை வேடிக்கை பார்த்த மணமகள் அதிர்ச்சியில் திடீரென மேடையில் மயங்கி விழுந்தார்.

ஜுன் 9, 2023 - 23:48
மணமகளை தூக்கி கொண்டு ஓடிய மணமகன்

தமிழகத்தின் நாகர்கோவில் மாவட்டத்தில் தனியார் திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்ற திருமண விருந்து உபசரிப்பு விழாவில் மணமகன் வீட்டாருக்கும் மணமகள் வீட்டாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

மணமகளின் உறவினர் சிலர் மது போதையில் திருமண மண்டபத்தில் குத்தாட்டம் போட்டதுடன் அங்கு நின்று கொண்டு இருந்த மணமகனின் உறவுக்கார பெண்கள் மீது மோதியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து எழுந்த வாக்குவாதத்தில் இருவீட்டார் இடையிலும் மோதல் வெடித்தது, அத்துடன் திருமண மண்டபத்தில் இருந்த கண்ணாடிகள் மற்றும் பிளாஸ்டிக் நாற்காலிகளை மோதலில் இரு வீட்டாரும் அடித்து உடைத்தனர்.

இந்நிலையில் இரு வீட்டாருக்கும் இடையே நடைபெற்ற சண்டையை வேடிக்கை பார்த்த மணமகள் அதிர்ச்சியில் திடீரென மேடையில் மயங்கி விழுந்தார்.

இதைப்பார்த்த மணமகன் உடனடியாக மணமகளை தோளில் தூக்கி கொண்டு மருத்துவமனையை நோக்கி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!