3 மாதங்களுக்கு முன் தாய் மறைந்தார்.. குடும்பமே சோகத்தில் உள்ளது.. ஆஃப்கான் கேப்டன் ஷாகிதி பேட்டி

இந்த வெற்றியின் மூலமாக ஆஃப்கானிஸ்தான் அணி புள்ளிப்பட்டியலில் 8 புள்ளிகளுடன் 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இதனால் அரையிறுதி சுற்றுக்கான ரேஸிலும் முன்னிலை பெற்றுள்ளது.

நவம்பர் 4, 2023 - 14:20
3 மாதங்களுக்கு முன் தாய் மறைந்தார்.. குடும்பமே சோகத்தில் உள்ளது.. ஆஃப்கான் கேப்டன் ஷாகிதி பேட்டி

நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் அடைந்த வெற்றியை வாழ்வுக்காக போராடி வரும் அகதிகளுக்கு அர்ப்பணிப்பதாக ஆஃப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ஷாகிதி தெரிவித்துள்ளார்.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஃப்கானிஸ்தான் அணி அபார வெற்றியை பெற்றுள்ளது. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய நெதர்லாந்து அணி 46.3 ஓவர்களில் 179 ரன்கள் சேர்த்து ஆல் அவுட்டாகியது. நெதர்லாந்து அணியின் டாப் 5 பேட்ஸ்மேன்களில் 4 பேர் ரன் அவுட்டானதே பின்னடைவாக மாறியது.

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணி 31.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்து அபார வெற்றியை பெற்றது. 

இந்த வெற்றியின் மூலமாக ஆஃப்கானிஸ்தான் அணி புள்ளிப்பட்டியலில் 8 புள்ளிகளுடன் 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இதனால் அரையிறுதி சுற்றுக்கான ரேஸிலும் முன்னிலை பெற்றுள்ளது.

யாராவது இப்படி ஒரு முடிவை எடுப்பாங்களா? இலங்கை அணித்தலைவர் மீது விழுந்த பழி.. என்ன நடந்தது?

இந்த வெற்றி குறித்து ஆஃப்கானிஸ்தான் கேப்டன் ஷாகிதி பேசுகையில், பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டோம். இந்த உலகக்கோப்பை தொடரில் மூன்றாவது முறையாக இலக்கை எட்டி வெற்றிபெற்றுள்ளோம். 

குறிப்பாக இந்த உலகக்கோப்பையில் இலக்கை அறிந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறோம். சூழலுக்கு ஏற்றபடி விளையாடி ஒரு அணியாக சாதித்து வருகிறோம்.

முகமது நபி எப்போதும் ஸ்பெஷல் வீரர். எப்போதெல்லாம் அணி சிக்கலில் உள்ளதோ, அப்போதெல்லாம் அணி வழி காட்டுவார். நாங்கள் அணியாக இணைந்து வெற்றியை அடைகிறோம். 

ஒவ்வொருவரின் எண்ணமும் அணியை நலனை மையமாகவே உள்ளது. அதேபோல் அரையிறுதி சுற்றுக்கு முன்னேற தீவிரமாக முயற்சி செய்து வருகிறோம். ஒருவேளை அரையிறுதிக்கு முன்னேறினால், அது மிகப்பெரிய சாதனையாக அமைந்திருக்கும்.

3 மாதங்களுக்கு முன் எனது தாய் மறைந்துவிட்டார். அதனால் எங்களின் குடும்பமே சோகத்தில் உள்ளது. அதனால் அரையிறுதிக்கு முன்னேறினால் எங்கள் நாட்டிற்கே மிகப்பெரிய சாதனையாக இருக்கும். அதேபோல் எனக்கும் மகிழ்ச்சியாக இருக்கும். 

அதேபோல் ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். ஏராளமான அகதிகள் போராடி வருகிறார்கள். அவர்களி வீடியோக்களை பார்த்து, அவர்களின் வலிகளை உணர்கிறோம். இந்த வெற்றியை அவர்களுக்கு அர்ப்பணிக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!