யாராவது இப்படி ஒரு முடிவை எடுப்பாங்களா? இலங்கை அணித்தலைவர் மீது விழுந்த பழி.. என்ன நடந்தது?
இலங்கை அணித்தலைவர் குசால் மென்டிஸ் எடுத்த தவறான முடிவு தான் இலங்கை அணியின் படு தோல்விக்கு முழு காரணம் என அவரை விளாசி வருகிறார்கள் ரசிகர்கள்.

இலங்கை அணித்தலைவர் குசால் மென்டிஸ் எடுத்த தவறான முடிவு தான் இலங்கை அணியின் படு தோல்விக்கு முழு காரணம் என அவரை விளாசி வருகிறார்கள் ரசிகர்கள்.
இலங்கை அணித்தலைவர் எடுத்த டாஸ் முடிவு தான் தோல்விக்கு காரணம் என ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். இலங்கை அணி முதலில் பந்து வீசாமல் பேட்டிங் செய்து இருந்தால் தோல்வி அடைந்திருந்தாலும் இத்தனை மோசமாக இருந்திருக்காது என தங்கள் பார்வையை கூறி வருகின்றனர். எந்த இடத்தில் டாஸ் முடிவு தவறாக சென்றது?
இந்தியா - இலங்கை மோதிய போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. அந்த மைதானம் பொதுவாகவே பேட்டிங் செய்ய சாதகமான ஆடுகளம். அத்துடன் வேகப் பந்துவீச்சுக்கும் ஒத்துழைக்கும். அங்கே புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்.
இந்தப் போட்டிக்கு முன்பு பிட்ச்சை பார்வையிட்ட வர்ணனை யாளர்கள் குழுவில் இருந்த முன்னாள் வீரர்கள் ரிக்கி பாண்டிங், மைக் ஆதர்டன் கூறுகையில், இது பேட்டிங் செய்ய சாதகமான பிட்ச், டாஸ் வென்றால் முதலில் பேட்டிங் செய்யவே அந்த அணி விரும்பும் எனக் கூறி இருந்தனர்.
ஆனால், இலங்கை அணி கேப்டன் குசால் மென்டிஸ் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார். அவர் முதலில் இந்தியாவை ஆட வைத்து குறைந்த ஸ்கோரில் இந்தியாவை சுருக்கலாம் என எண்ணி இருக்கிறார். ஆனால், இந்திய அணி 357 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய இலங்கை அணி 55 ரன்களில் ஆல் - அவுட் ஆனது.
ஒருவேளை இந்தியா இரண்டாவதாக பேட்டிங் செய்து இருந்தால் நிச்சயம் இலங்கை அணி போல பேட்டிங் செய்ய தடுமாறி இருக்கும். குறைந்தபட்சம் முதல் பத்து ஓவர்களாவது புதிய பந்தில் ஸ்விங் பந்துகளை எதிர்கொள்ள தடுமாறி இருக்கும்.
அந்த வாய்ப்பை இலங்கை கேப்டன் குசால் மென்டிஸ் தவறவிட்டு விட்டார். தவறான முடிவை எடுத்தார் என இப்போது தோல்விக்கான மொத்த பழியும் குசால் மென்டிஸ் மீது விழுந்துள்ளது.