செவ்வாயின் கோபத்தில் சிக்கிய ராசிக்காரர்கள் இவர்கள்தான்!
நவகிரகங்களின் தளபதியாக விளங்க கூடிய செவ்வாய் பகவான் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றிக் கொண்டே இருப்பார்.

நவகிரகங்களின் தளபதியாக விளங்க கூடிய செவ்வாய் பகவான் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றிக் கொண்டே இருப்பார்.
நவகிரகங்கள் இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த இடமாற்றத்தை பொறுத்தே ஒருவரின் ஜாதகம் அமைக்கப்படுவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
செவ்வாய் பகவானின் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது தற்போது துலாம் ராசியில் பயணம் செய்து வரும் செவ்வாய் பகவான் வரும் நவம்பர் 16ஆம் தேதி விருச்சக ராசியில் பயணம் செய்ய உள்ளார்.
இதனால் சில ராசிகள் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை அமைந்துள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து விட தெரிந்து கொள்வோம்.
ரிஷப ராசி
செவ்வாய் பகவானால் உங்களுக்கு சங்கடங்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே எச்சரிக்கையாக இருங்கள். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் சிக்கல்கள் அதிகம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் மற்றவர்களிடம் பேசும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் வாகனம் ஓட்டும் போது கவனமாக இருப்பது நல்லது.
கடக ராசி
தொழில் மற்றும் வியாபாரத்தில் சில சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மற்றவர்களிடம் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. கணவன் மனைவிக்கிடையே சங்கடங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. புதிய முடிவுகளை தவிர்ப்பது நல்லது.
தனுசு ராசி
செவ்வாய் பகவானால் உங்களுக்கு சிக்கல்கள் ஏற்பட உள்ளது. குடும்ப உறவினர்களிடம் சண்டைகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. பணவரவு சில சிக்கல்கள் ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரம் சற்று மந்தமாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்வது நல்லது. மாணவர்கள் கல்வியில் சற்று மந்தமாக விளங்குவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)