லங்கா பிரீமியர் லீக்: இன்றைய போட்டியில் மோதவுள்ள அணிகள்
எல்பிஎல் 2023: லங்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் மேலும் இரண்டு போட்டிகள் இன்று (31) நடைபெற உள்ளன.

லங்கா பிரீமியர் லீக்
லங்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் மேலும் இரண்டு போட்டிகள் இன்று (31) நடைபெற உள்ளன.
கோல் டைட்டன்ஸ் மற்றும் தம்புள்ளை அவ்ரா அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று பிற்பகல் 3.00 மணிக்கு கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளது.
மற்றைய போட்டி B-Love Candy மற்றும் கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணிகளுக்கு இடையில் இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
நேற்று (30) இடம்பெற்ற முதலாவது போட்டியில் யாழ்ப்பாண கிங்ஸ் அணி 21 ஓட்டங்களால் கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணியை வீழ்த்தியிருந்தது.
எல்பிஎல் 2023: கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் வீழ்த்தியது ஜாஃப்னா கிங்ஸ்!