எல்பிஎல் 2023: கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் வீழ்த்தியது ஜாஃப்னா கிங்ஸ்!

கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணிக்கெதிரான எல்பிஎல் லீக் ஆட்டத்தில் ஜாஃப்னா கிங்ஸ் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.

எல்பிஎல் 2023: கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் வீழ்த்தியது ஜாஃப்னா கிங்ஸ்!
ADVERTISEMENT
ADVERTISEMENT

எல்பிஎல் 2023

கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணிக்கெதிரான எல்பிஎல் லீக் ஆட்டத்தில் ஜப்னா கிங்ஸ் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.

இலங்கையில் தொடங்கி நடைபெற்றுவரும் லங்கா பிரீமியர் லீக் தொடரின் 4ஆவது சீசன் நேற்று கோலாகலமாக தொடங்கியது. முதலாவது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் ஜப்னா  கிங்ஸ் மற்றும் கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இப்போட்டியில் டாஸ் வென்ற கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது.

அதன்படி களமிறங்கிய ஜப்னா அணிக்கு நிஷன் மதுஷங்க - ரஹ்மனுல்லா குர்பாஸ் இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர். 

இதில் மதுஷங்க 12 ரன்களிலும், குர்பாஸ் 21 ரன்களுக்கும் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய சரித் அசலங்கவும் 12 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். பின்னர் இணைந்த தவித் ஹிர்டோய் - பிரியமால் பெரேரா இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT

பின் பெரேரா 22 ரன்களுக்கு ஆட்டமிழக்க, மறுமுனையில அதிரடியாக விளையாடிய ஹிரிடோய் அரைசதம் கடந்த கையோடு 4 பவுண்டரி, ஒரு சிக்சர் என 54 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். 

இறுதியில் துனித் வெல்லாலகே - கேப்டன் திசர பெரேரா இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 

ஒரே ஒவரில் 7 சிக்சர்களை பறக்கவிட்ட வீரர்; ருதுராஜ் சாதனை சமன்!   

இதன்மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் ஜப்னா கிங்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்களைச் சேர்த்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த வெல்லாலகே 25 ரன்களையும், திசார பெரேரா 14 ரன்களையும் சேர்த்தனர். 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணிக்கு நிரோஷன் திக்வெல்ல அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தார். 

ஆனால் அதேசமயம் மறுபக்கம் நட்சத்திர வீரர்கள் பாபர் அசாம் 7 ரன்களிலும், பதும் நிஷங்க ஒரு ரன்னிலும், ஃபெர்னாண்டோ 17 ரன்களிலும் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். 

ஆனால் மறுபக்கம் அதிரடியாக விளையாடி வந்த நிரோஷன் திக்வெல்ல அரைசதம் கடந்த கையோடு 9 பவுண்டரி, ஒரு சிக்சர் என 58 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். 

அதனைத்தொடர்ந்து களமிறங்கிய யொஷோதா லங்கா 11 ரன்களுக்கும், சமீகா கருணர்த்ன 23 ரன்களுக்கும், முகமது நவாஸ் 3 ரன்களுக்கும் என சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். 

இறுதியில் கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 152 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

ஜப்னா அணி தரப்பில் விஜோன் 3 விக்கெட்டுகளையும், விஜயகாந்த், தில்சன் மதுஷங்கா தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

இதன்மூலம் ஜப்னா கிங்ஸ் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் கொழும்பு ஸ்டிரைக்கர்ஸை வீழ்த்தி தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது. 

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT