ஒரே ஒவரில் 7 சிக்சர்களை பறக்கவிட்ட வீரர்; ருதுராஜ் சாதனை சமன்!   

ஆஃப்கானிஸ்தானில் காபூல் பிரிமியர் லீக் நடைபெற்று வருகிறது. இந்த காபூல் பிரிமியர் லீக்கில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஷகீன் ஹண்டர்ஸ் மற்றும் அபாஸின் டிஃபெண்டர்ஸ் அணிகள் மோதின.

ஜுலை 31, 2023 - 10:56

இந்தப் போட்டி ஆஃப்கானிஸ்தானின் அயோபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றுள்ளது. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த ஷகீன் ஹண்டர்ஸ் அணியைச் சேர்ந்த செதிகுல்லா அடல் 56 பந்துகளில் 118 ரன்கள் விளாசி அசத்தினார். 

செதிகுல்லா அடல் பேட் செய்தபோது ஆட்டத்தின் 19ஆவது ஓவரை வீச வந்தார் அமீர் சசாய். முதல் பந்தை அமீர் ஸஸாய் நோபாலாக வீச அதனை சிக்ஸருக்கு பறக்கவிட்டார் செதிகுல்லா. 

காயத்திலிருந்து மீண்டு விக்கெட்டை வீழ்த்திய பும்ரா!

அதன்பின் வைட் வீசி 5 ரன்களை சசாய் விட்டுக் கொடுத்தார். தொடர்ந்து ஸஸாய் வீசிய 6 பந்துகளில் 6 சிக்ஸர்களை விளாசி அசத்தினார் அடல். ஸஸாய் வீசிய அந்த ஓவரில் மட்டும் ஷகீன் ஹண்டர்ஸ் அணிக்கு 48 ரன்கள் கிடைத்தது. 

இதன்மூலம், ஒரு ஓவரில் 6 சிக்ஸர்கள் விளாசியவர்கள் பட்டியலில் இணைந்தார் செதிகுல்லா அடல். அவர் ஸஸாய் வீசிய நோபாலில் அடித்த சிக்ஸரையும் சேர்த்து மொத்தமாக 7 சிக்ஸர்கள் விளாசினார்.

இதன்மூலம் ஒரு ஓவரில் 7 சிக்ஸர்கள் விளாசிய இரண்டாவது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். இதற்கு முன்னதாக இந்திய அணியின் ருதுராஜ் கெய்க்வாட் ஒருஓவரில் 7  சிக்ஸர்கள் விளாசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!