விஷ்ணு விஷால் மறுபடியும் மனைவியை பிரிந்தாரா?

விஷ்ணு விஷாலுக்கு முதலில் ரஜினி என்பவருடன் திருமணம் நடந்து, பின்பு விவாகரத்து ஆனது. அதன் பிறகு, விளையாட்டு வீராங்கனை ஜூவாலா குட்டாவுடன் திருமணம் நடந்தது. 

மார்ச் 27, 2023 - 19:35
விஷ்ணு விஷால் மறுபடியும் மனைவியை பிரிந்தாரா?

விஷ்ணு விஷாலுக்கு முதலில் ரஜினி என்பவருடன் திருமணம் நடந்து, பின்பு விவாகரத்து ஆனது. அதன் பிறகு, விளையாட்டு வீராங்கனை ஜூவாலா குட்டாவுடன் திருமணம் நடந்தது. 

இருவரும் இணைந்து மகிழ்ச்சியுடன் இருக்கும் புகைப்படங்களையும் அவ்வப்போது சமூகவலைதளங்களில் இருவரும் பகிர்ந்து வந்தனர். இந்த நிலையில், திடீரென நடிகர் விஷ்ணு விஷால் போட்டிருக்கும் ட்வீட் ஒன்று ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, ‘பரவாயில்லை! நான் மீண்டும் முயற்சி செய்தேன். நான் மீண்டும் தோற்றுவிட்டேன். நான் மீண்டும் கற்றுக்கொண்டுள்ளேன். கடைசி முறை அது என் தோல்வியோ என் தவறோ கிடையாது. அது ஒரு துரோகம் மற்றும் ஏமாற்றம்’ என்று குறிப்பிட்டுள்ளார் விஷ்ணு விஷால். 

இந்த ட்வீட்டை பதிவிட்டப் பிறகு அதை டெலிட்டும் செய்து விட்டார். இது அவரது இரண்டாவது மண வாழ்க்கை குறித்தான குழப்பத்தை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

’கட்டாகுஸ்தி’ படத்தின் வரவேற்புக்குப் பின்பு நடிகர் விஷ்ணு விஷால் தற்போது, ஐஷ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ‘லால் சலாம்’ படத்தில் நடித்து வருகிறார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!